செய்துங்கநல்லூர் நூலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலைநம்பி தலைமை வகித்தார். வாசகர் வட்ட பொருளாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். தேசிய கொடியேற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வாசகர் வட்ட துணைத்தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஜீவா, செல்லய்யா, ஓய்வுபெற்ற தபால்காரர் செல்லப்பா, முகைதீன் அப்பாஸ், இம்ரான் , தாரிக் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் சம்சூதீன் நன்றி கூறினார்.


