கருங்குளத்தில் கிராம மக்கள் நலக்குழுவின் சார்பில் 22 தீர்மானங்களை நிறைவேற்ற கோரி அதன் தலைவர் ச.உடையார் தலைமையில் உண்ணாவிரதம் குடியரசு தினவிழா அன்று இருபதென்று முடிவுசெய்யப்பட்டது. இதற்கான கடிதங்களை முறைப்படி அதிகாரிகளுக்கு உடையார் அனுப்பி வைத்தார். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் குடியரசு தினவிழா அன்று காலை 9 மணிக்கு கருங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் உண்ணாவிரதம் இருக்க உடையார், அவரது மகன் கருணாநிதி உள்பட ஆதரவாளர்கள் வந்தனர். அவர்களை உண்ணாவிரதம் இருக்க கூடாது என போலிசார் தடுத்தனர். ஆனால் தடையை மீறி உண்ணாவிரதம் இருப்பதாக உடையார் அறிவித்தார். சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா உடையார் மற்றும் அவரது மகன் கருணாநிதியை கைது செய்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசு தினமன்று உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்த உடையார் திருமணத்தினை முன்னாள் முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


