தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காசநோய் பிரிவில், சிறப்பாக பணியாற்றியமைக்காக, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்களுக்கு, தூத்துக்குடியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அப்துல் ரஹீம் ஹீராவை பொதுமக்கள் சார்பில் பலர் பாராட்டினார்கள்.


