நாம் அனைவரும் இணைந்து காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இன்று காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசியதாவது: தேசிய அளவில் மிக முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக காசநோய் விளங்குகிறது. ஒருங்கிணைந்த மற்றும் விரிவான அணுகு முறையின் மூலம் காசநோயை கண்டுபிடித்து சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பு பணிகளை வலிமைப்படுத்துவதற்காக தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நவீன யுத்திகளும் புகுத்தப்பட்டு வருகின்றது.
2025ம் ஆண்டின் கருப் பொருளாக ஆம்! நம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்!: என்பதாகும். அதே போல் காசநோய்க்கு எதிராக உறுதியுடன் முன் வருவோம் காசநோய் ஒழிப்பில் முதலீடு செய்வோம்!! காசநோயளிக்கான சேவையை வழங்குவோம்!!! என்ற கருப் பொருளானது கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றியை தந்துள்ளது. இதன் மூலம் காசநோயை ஒழிப்பதற்கான நம்பிக்கை, அவசரம் மற்றும் பொறுப்புகளும் அதிகரித்துள்ளது.


