தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து தொடங்கப்பட்ட ஊர்வலத்தை வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த சிறுவனோடு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, வட்டச்செயலளார் டென்சிங் முன்னாள் தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்செந்தில்குமார், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகரில் கிறிஸ்து பிறப்பை வரவேற்;கும் வகையில் பிரேசில் கனடா மெக்சிகோ அமெரிக்கா உள்பட பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவது போன்ற அலங்கார ஊர்திகளில் பல்வேறு வடிவங்களில் உருவங்களை அமைத்து உற்சாக நடனமாடியபடி அதிரடி இசைமுழக்க இளைஞர்கள் கொண்டாடுவது வழக்கம்.
மாநகரில் லயன் ஸ்டவுன் மரக்குடி மட்டக்கடை பாத்திமாநகர் திரேஸ்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஊர்வலம் மாநகரில் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.


