என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் சேதுக்கு வாய்த்தான் கிராமத்தில் மாபெரும் முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்க்கு உட்பட்ட சேதுக்கு வாய்த்தான் கிராமத்தில் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வைத்து மாபெரும் முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வருகை தந்தவர்களை மாவட்ட சுகாதாரப் பேரவை உறுப்பினரும் , மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அனைவரையும் வரவேற்றார்.. லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை சேதுக்கு வாய்த்தான் ஊராட்சி மன்றம் தலைவர் சீ.சுதா சீனிவாசன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்து அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் திவ்யா சங்கர், ஷெப்னா தலைமையில் செவிலியர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கண் புரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருத்துவம், தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு தொடர் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து பிரச்சனை உள்ளவர்களுக்கு கண் மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் கண்ணாடிகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் கண்பார்வையில் பிரச்சனை உள்ள 205 கலந்து கொண்டனர். இதில் 102 பேருக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. 55 பேருக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கண் மை அறுவை சிகிச்சை செய்வதற்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
முகாமில் சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்து துணைத் தலைவர் எஸ் வைகைகரையான் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேதுக்கு வாய்த்தான் ஊராட்சி மன்ற தலைவர் சுதா சீனிவாசன், மதர் சமூக சேவை நிறுவன பணியாளர் ஜெயலீலா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


