தேசிய மாணவர் படை தினத்தை (என்சிசி) முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தூய்மைப் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட 29ஆவது தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி கர்னல் பிரதோஷ் உத்தரவுபடி, பல்வேறு இடங்களிலும் தேசிய மாணவர் படை தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி, முத்துநகர் கடற்கரையில் நேற்று நடைபெற்ற தூய்மைப் பணியை கர்னல் பிரதோஷ் தொடக்கிவைத்தார். இதில், காமராஜ் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, காமராஜ் கல்லூரியில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. வ.உ.சி கல்லூரி, காமராஜ் கல்லூரி, திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் லயோலா பொறியியல் கல்லூரி, சிவகாசி உண்ணாமலை கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர், மாணவிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில், சுபைதார் சந்திரசேகர், அவில்தார் சுரேஷ், தேசிய மாணவர் படை அலுவலர்கள் புளோரா, பச்சிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


