ஆறாம்பண்ணையில் தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். எக்ஸ்னோரோ நிறுவனத்தின் மூலம் வாடகை இல்லா இயந்திரம் மூலம் மற்றும் தனியார் அரசு உதவியுடன் பணிகள் நடந்து வருகிறது.
மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த பணி ஆறாம்பண்ணையில் நடைபெறுகிறது. மருதூர் மேலக்கால் உதவி பொறியாளர் சதீஷ், கீழக்கால் உதவி பொறியாளர் அமீர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பணி மேற்பார்வையாளர் பண்டாரம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


