திமுகவை பொறுத்தவரை எப்போதும் மக்கள் பணி தான் முக்கியம் என்று கருதி எல்லோரும் பணியாற்றுவோம் என அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
மாநில திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டியும், திமுக பவள விழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி 4 மற்றும் 11வது வார்டு பகுதிக்குட்பட்ட சக்தி விநாயக புரம் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச பொதுசேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு மாநகர திமுக சுற்றுசூழல் அணி தலைவர் வினோத் தலைமை வகித்தார்.
விழாவில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியேற்றி, மரக்கன்றுகள் நட்டி இலவச பொதுசேவை மையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, பான்கார்டு, கணினி பட்டா ஆகியவற்றை வழங்கி கேக் வெட்டி பல்வேறு பணிகளை செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினனார்.
பின்னர் அவர் பேசுகையில்: இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்ந்த பல திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த இலவச பொதுசேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த மையத்தின் மூலம் பல்வேறு இணையதள நகல்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அரசு சார்ந்த பல்வேறு திட்டங்கள் உள்ளனர். அவற்றை முறையாக இந்த சேவை மையம் மூலம் பதிவு செய்து பலனடைந்து கொள்ளுங்கள். எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதெல்லாம் தமிழக மக்களுக்கு பொற்காலம்.
காரணம் திமுகவை பொறுத்தவரை எப்போதும் மக்கள் பணி தான் முக்கியம் என்று கருதி எல்லோரும் பணியாற்றுவோம். அந்த அடிப்படையில் தொகுதி முழுவதும் எல்லோருக்கும் பாரபட்சமின்றி அரசு சார்ந்த பணிகள் மட்டுமின்றி கட்சிப்பணிகளையும் பாகுபாடு இல்லாமல் செய்து வருகிறோம். மக்களுக்கு பணியாற்றுவதற்குத் தான் பொதுவாழ்க்கையில் முழுமையாக எங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றுகிறோம். இதை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு எதிர்வரும் காலத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசுக்கு அனைவரும் உறுதுணையாக இருந்து ஆதரவு தர வேண்டும். உங்களது கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை ஆய்வு செய்து முழுமையாக செய்து கொடுப்போம் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
பின்னர் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார். விழாவில், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன்சிங், நைஸ் பரமசிவம், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், வார்டு தலைவர் அற்புதராஜ், வட்டச்செயலாளர் சதீஸ்குமார், துணை செயலாளர் மணிராஜ்குமார், வட்டபிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், மகளிரணி பானுபிரியா மற்றும் சுதன்கீலர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


