தூத்துக்குடி தூ.சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகேயுள்ள டி.சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தை அந்தோணி ஜெகதீசன் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அருட்தந்தையர்கள் உபர்ட்டஸ், அமலன், சகாயராஜ், ஜெய்கர், வின்சென்ட், ஜஸ்டின், கிங்ஸ்டன், வினித், அருள் சகோதரிகள்,ஊர்நிர்வாகிகள், ஊர் இறை மக்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீர் தினமும் நடைபெறும். 7ஆம் திருவிழா அன்று பாதுகாவலர் சவேரியாரின் திருஉருவ பவனி நடைபெறும். 8ஆம் திருவிழா அன்று காலை புதுநன்மை திருப்பலியும், 9ஆம் திருவிழா அன்று மாலை திவ்ய நற்கருணை ஆசீரும், 10ஆம் திருவிழாவான டிசம்பர் 3 ஆம் தேதி அன்று காலை பாடல் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து சப்பர பவனியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை குழந்தை ராஜன் அருள் சகோதரிகள் மற்றும் ஊர் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்


