குதிரைமொழித்தேரியில் பனைமர விதைகள் நடும் பணியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், குதிரைமொழித் தேரியில் காயாமொழி அரசு மேல்நிலைப் பள்ளி, மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் ஒருங்கிணைப்பில் 300 பனை விதைகள் விதைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் ஆலோசனையின் பெயரில் திருச்செந்தூர் கோட்ட வனசரகர் கவின் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து 25ஆயிரம் பனை விதைகள் பருவமழையில் விதைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


