Nellai Runners மற்றும் Egg-foundation இணைந்து நடத்திய விழிப்புணர்வு மராதான் தொடர் ஓட்ட போட்டிகள் கோபாலசமுத்திரம் பண்ணை வெங்கட்ராம ஐயர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து ஆரம்பித்து தாமிரபரணி நதிக்கரை வழியாக பல ஊர் தடுப்பணை வரை சென்று பின்பு கொத்தங்குளம் தருவை வழியாக மேலும் முன்னிட்டு பழம் வரை பாளையம் கால்வாயின் கரையில் அதாவது தாமிரபரணி ஆற்றின் தெற்கு கரையில் கரடு முரடான வழித்தடங்களில் மராத்தான் ஓட்டம் நிகழ்வு நடைபெற்றது இதில் 90 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர் நான்கு வயது குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை இத்தொடர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டனர் என்பது மிகவும் சிறப்பான செய்தி. கோபால சமுத்திரத்தை சேர்ந்த பல இளைஞர்கள் இந்த ஓட்டுப் போட்டியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் போட்டியின் இறுதியில் பாளையங்கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த வருட மழைக்கால இறுதிக்குள் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கலந்து கொண்ட அத்தனை ஓட்ட போட்டி வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் Nellai Runners ஒருங்கிணைப்பாளர்களுக்கும், பண்ணை வெங்கட்ராமையர் உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும் நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.


