காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை இளநிலை பட்டதாரி பயிற்சியை முடித்த இவர் பொறியாளராக பணியாற்ற துவங்கினார். சென்னை தரமணி அனைத்துலகப் பள்ளியில் இணையத்துக்கும் கைபேசிச் செயலிக்கும் வடிவமைப்புக்கும் முதன்மை பொறியாளர் இணைய மேம்பாட்டிலும் கைபேசிச் செயலி வடிவமைப்பதிலும் ஆர்வலர் பல்வேறு தொழில் நிறுவனங்களில், மென்பொருளாளர் தொழில்சார் பயணமாக உலகெங்கும் சென்றவர். ஆஸ்திரேலியா வில் ஓராண்டு காலம் இவரது அரும்பணி தொழில் நுட்பத் துறையில் திறமைசாலி. வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியவர் புத்தாக்கத்தில் ஆர்வலர் வடிவத்தில் கூர்மையாளர் இணையதளங்களை வடிவமைத்து பாராட்டுதல் பெற்றவர். காட்சிக்கு கவர்ச்சியான இணைய பக்க முகங்கள் இவர் சாதனை வளர்ச்சிப் பணிகளை அமைத்தவர் முன்னோடி செயல்திட்டங்களின் நாயகர். AISC மற்றும் www.thevaaram.org இணையதளங்கள் இவரின் நுண்மா நுழைபுலத்திற்கு சான்று, செயல் ஈடுபாட்டுக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டு.
பன்னிரு திருமுறைகளை இணையத்தில் உலகெங்கும் பார்த்து 18,268 பாடல்களையும் படித்து பொருள் தெரிந்து, நம் மையலவர் மொழியில் மொழிபெயர்த்து மொழிபெயர்த்து அனைத்து பாடல்களுக்கும் பன்னிசை அணைத்து கோயில்களுக்கும் காணொளி அனைத்து கோயில்களுக்கும் வரலாறு அனைத்து அருளாளருக்கும் வரலாறு என வடிவமைத்த அரும்பெரும் பணிக்காக இவருக்கு திருமுறை திருமகன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சென்னை கிண்டி மேதகு ஆளுநர் மாளிகை பாரதியார் மண்டபத்தில் வைத்து கவர்னர் ரவி வழங்கினார்.
விருது பெற்ற சாமுவேல் ராஜ் சிதம்பரத்தினை செய்துங்கநல்லூர் பகுதி மக்கள் பாராட்டினர்.


