கோவில்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி ஆடிட்டரிடம் செல்போன் பறித்த 4பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவில் வசிப்பவர் ஆவடி தங்கம் மகன் கண்ணன் (47), ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே நேற்று சென்று கொண்டிருந்த போது இரண்டு பைக்கில் வந்த 4 பேர் இவரை கத்தியை கட்டி மிரட்டி அவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துசென்று விட்டார்களாம். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


