நெல்லை மாவட்ட ராமமையன் பட்டி ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருபவர் நம்பிராஜன். இந்த மாணவன் சிலம்ப கலையில் சிறு வயதிலேயே புகழ் பெற்று வருகிறான். இவன் கடந்த ஜூலை மாதம் 29.07.2023 தேதி அன்று கொடைக்கானலில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார் . இதையட்டிபள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவனை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள் சக ஆசிரியர் பெருமக்கள் மாணவனை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மாணவன் நம்பிராஜன் தச்சநல்லூர் பிரபல சிலம்ப ஆசான் சங்கர ஆசானின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.


