
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. நெல், உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவத்தின் மூலம் விவசாயத்தில் இழப்பு வராமல் இருப்பதறக்கு உரிய வழிவகை செய்து வருகிறது. விவசாயிகளிடத்தில் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டயல் அவுட் கான்பெரென்ஸ் முறையில் திருவைகுண்டம் வட்டாரத்தில் உள்ள சேரகுளம், தொழப்பன்பண்ணை மற்றும் பத்மநாபமங்கலம் கிராமங்களை சார்ந்த 40 விவசாயிகள் தேர்தெடுக்கப்பட்டனர். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் அருண்ராஜ் மண் பரிசோதனையின் அவசியம், மண் பரிசோதனையின் நன்மைகள், மண் மாதிரி எடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.