தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் (24.04.2024) இன்று சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமினை மருத்துவ அலுவலர் டாக்டர்.லெக்ஷ்மி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் திரு.அய்யமாள் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 12 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 11 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர்கள் திரு.கிறிஸ்டின் குமாரதாஸ், திருமதி.ச.கிருஷ்டி, சுகாதார பார்வையாளர் திருமதி.முத்துலட்சுமி, ஐ.சி.எம்.ஆர், ஆய்வகநுட்பனர் திருமதி. முனீஸ்வரி, எக்ஸ்ரே நுட்பனர் திரு.வில்பிரட், திரு.அரி பாலகிருஷ்ணன், டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் திரு.கணேசன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


