தெற்குச் சோட்டையன் தோப்பில் திமுக இளைஞரணி சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பின்படி தெற்குச் சோட்டையன் தோப்பில் தருவைக்குளம் சாலையில் கோடைகால தண்ணீா் பந்தலை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஸ்டாலின் துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு தண்ணீா், மோா் மற்றும் தா்பூசணியை வழங்கினார். இதில் திமுகவினர், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


