250 வருடங்களுக்கு பிறகு செய்துங்கநல்லூர் அருகே உள்ள தெற்கு காரசேரி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரநாதர் ஆலயத்தில் கும்பாபிசேகம் நடந்தது.
மிகவும் பழமையான ஆலயம் தெற்கு காரசேரி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர் ஆலயம். இந்த ஆலயம் குலசேகர மன்னரால் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் இந்த கோயிலில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு சுரங்கபாதை இருந்தது என்றும் கூறுவர்.
இந்த ஆலயம் மிகவும் சிதிலமடைந்து விட்டது. இதனால் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் கோபுர வேலைகள், மதில்சுவர் வேலைகள், கோபுர வேலைகள் உள்பட பல திருப்பணிகள் நடந்தது. தற்போது திருப்பணி முடிந்து நேற்று கும்பாபிசேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி காலை 6 மணிக்கு பூஜை ஆரம்பமானது. இதில் பிம்பசுத்தி, ரஷாபந்தனம், ஸ்பருசாஹீதி, நாடி சந்தானம், தீபாரதணை, யாத்ராதானம் கடம் புறம்பாடு ஆகியவை நடந்தது. பின் 9 மணிக்கு மேல் விமானம் இரா£ஜகோபுரம், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சுவாமி, அம்மாள், தெட்சணாமூர்த்தி, பைரவர் ஆகியோருக்கு மகா கும்பாபிசேகம் நடந்தது.
கும்பாபாபிசேகத்தினை ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திஞான பரமாச்சாரிய சுவாமிகள், திருவாரூர் சிவஸ்ரீ நடராஜ சுவாமிகள் குடமுழுக்கு நடத்தி அருளாசி வழங்கினார்கள். பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.
இரவு பிரசன்னபூஜை, திருக்கல்யாணம், அலங்கார தீபாராதனை, பஞ்சமூர்த்தி சிறப்பு மேளத்துடன் புறப்பாடு நடந்தது.
கும்பாபிசேகத்தினை தியாகராஜநகர் வெங்கடசுப்பிரமணிய பட்டர், சுந்தரபட்டர், சிவசுப்பிரமணிய பட்டர், ஜமீன் சிங்கம்பட்டி ஹரி முத்தையா பட்டர், சோமசுந்தர பட்டர் ஆகியோர் நடத்தினார்கள்.