தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மே மாதத்தில் முழுமையான பணிகள் நிறைவடையும் என்று தெற்கு மண்டல குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தாா். மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி வரவேற்புரையாற்றினாா்.
மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் அவரது உத்தரவிற்கிணங்க ஊராட்சி புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இந்த மண்டலத்தில் நடைபெறுகிறது. இந்த பகுதி ஊராட்சியாக இருந்து மாநகராட்சியாக இணைக்கப்பட்ட பகுதி விவசாயம் சார்ந்த ஏாியாவாக உள்ளது.
புதிய பூங்காக்கள் வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் திருச்செந்தூர் கோவில் செல்லும் பாதசாாி பக்தர்களுக்கு ஒய்விட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி டைடல் பாா்க் உள்ளது. மரக்கன்றுகள் நடப்பட்டு மாவட்டத்தில் நினைவு சின்னங்கள் மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்ற வாறு பணிகள் செய்துள்ளோம் முள்ளக்காடு வரை மாநகராட்சி பகுதி என்பதால் எங்கள் பணியும் நடைபெற்றுள்ளது. ஹைவேஸ் சாா்பிலும் சாலைப்பணி நடைபெற்றுள்ளது.
ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் பல விாிவாக்க பணிகள் நடைபெற்றுள்ளதால் புதிய குடியிருப்புகள் வந்துள்ளன. அதற்கேற்றாற் போல் ஏற்கனவே 2900 புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக 2100 மின்விளக்குகள் அமைக்கப்படவுள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சர் ஓதுக்கிய நிதியில் முழுமையாக பணிகளை செய்துள்ளோம். அடுத்தக்கட்ட நிதியில் கோடை மழை முடிவு பெற்றதும் கணக்கீட பட்டு அனைத்து சாலைகளையும் முறையாக செய்து கொடுப்போம்.
வியாபாாிகளின் கோாிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றி கொடுத்துள்ளோம். தயவு செய்து கோிபேக் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யாமலும் பயன்படுத்தாமல் இருங்கள் மக்களும் அதை பயன்படுத்த வேண்டாம். இந்தபகுதியில் புதிய நடைபயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளன. அனைவருடைய ஓத்துழைப்பு அவசியம் என்று பேசினாா். மாநகராட்சி நிா்வாகம் கேட்டுக்கொண்ட படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்துள்ளதால் மூடப்பட்டுள்ள ஓட்டல் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் மனு அளித்தனா்.
நிகழ்ச்சியில் இணை ஆணையர் சரவணக்குமாா், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்டட செயற்பொறியாளர் ரெங்கநாதன், நகா்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், குழாய் ஆய்வாளர்கள் நிக்சன், பேட்ாிக், வருவாய் அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலா்கள் சரவணக்குமார், பட்சிராஜ், ராஜேந்திரன், வைதேகி, முத்துமாாி, விஜயகுமாா், ராஜதுரை, வட்டச்செயலாளர் பிரசாந்த், திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமாா், வா்த்தகா்களின் வியாபாாிகள் சங்க தலைவர் தொ்மல்ராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


