தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு விஸ்வரூப தீபாரணை நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மாலையில் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அருள்மிகு ராமானுஜருக்கு பெருமாள் காட்சியளித்தாா். பின்னா், கோவிந்தா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் சொா்க்கவாசல் வழியாக வெளியே வந்தனா். பின்னா் பெருமாள் மற்றும் ராமானுஜருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.


