தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படியும், நீர்வளத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும். இன்று (23.12.2023) நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் மழையால் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் சேதங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியினை துரித படுத்திட நீர்வளத்துறையின் உயர் அதிகாரிகள் முத்தையா, முதன்மைத் தலைமைப் பொறியாளர் முருகன், அரசு சிறப்புச் செயலாளர் பொன்ராஜ், தலைமைப் பொறியாளர் திட்ட உருவாக்கம் ஆகியோர்;; திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு நூற்றுக்கு பொறியாளர்களை கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பொழுது பிற மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடி, கோரம்பள்ளம் ஆறு மற்றும் சிற்றாறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைச் சீரமைக்கும் பொருட்டு தேவையான கட்டுமான தளவாடப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்ப அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களை வழங்கிடவும் உரிய உதவிகளை உடனடியாக செய்யவும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
வருங்காலங்களில் வெள்ள நீரினை கோடை காலத்திற்கு பயன்படுத்தும் வகையில் சேமித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கோவை மற்றும் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர்கள் சீரமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள், கள தொழில் நுட்ப அலுவலர்கள் ஆகிய பணிகளுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யவும் அறிவுறுத்தினார்.
அதன்படி சீரமைப்பு பணியின் முன்னேற்ற விவரங்கள் நீர்வளத்துறைக் கட்டுபாட்டிலுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆறுகள் ஏரிகள் கால்வாய்களில் சேதமடைந்த பகுதிகளாக 689 அடையாளம் காணப்பட்டன. இதில் 65 சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது மற்றும் 152 சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது தேமுள்ள 470 சீரமைப்புப் பணிகள் கண்டறியப்பட்டு சீர்செய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் திருச்சி மற்றும் கோவை மண்டலங்களிலிருந்து மதுரை மண்டலத்திற்கு 3 செயற் பொறியாளர்களும், 42 உதவி செயற் பொறியாளர்களும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 12 செயற் பொறியாளர்களும் 20 உதவி செயற் பொறியாளர்களும் மாற்றுப் பணி வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.


