கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருங்குளம் வட்டாரம், மற்றும் உழவர்நலத்துறையின் சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு பயறு வகைகள் திட்டம் மற்றும் சத்துமிகு சிறுதானியங்கள் திட்டங்களில் விசைதெளிப்பான்கள், சுழற்கலப்பைகள் விநியோகம் கைத்தெளிப்பான்கள் செய்யப்படவுள்ளது.
வேளாண்மை இத்திட்டங்களில் விவசாயிகளுக்கு சுழற்கலப்பை பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு ரூ.42000/- மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு ரூ.34000/-மானியத்திலும் வழங்கப்படுகிறது.
விசை தெளிப்பான்கள் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு ரூ.3800/-மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு ரூ.3000/-மானியத்திலும் வழங்கப்படுகிறது.
கைத்தெளிப்பான்கள் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு ரூ.750/-மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு ரூ.600/ மானியத்திலும் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மேற்கண்ட இடுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கருங்குளம் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார்.


