கருங்குளம் ஒன்றியத்தில் சிறப்பு குழந்தைகள் காகித பறவை செய்யும் போட்டி நடந்தது.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் சிறப்பு குழந்தைகள் சக மாணவர்களோடு இணைந்து காகிதம் மூலம் காகித பறவை செய்யும் போட்டி நடந்தது.
இந்த போட்டியினை சிறப்பாசிரியர்கள் கிரேனாபூ, காளியம்மாள், கலைச்செல்வி, நிஷா மேரி பிசியோதெரபி ஜான்சி ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி ,வெயில் முத்து, பீபேகம் ஆகியோர் கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


