உலக மரபு வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் செயல்பட்டுவரும் தொல்லியல் தளத்தில் அகல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது இதனை ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் பார்த்து பயன் அடைந்து வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உட்பட்ட பட்டினமருதூர், தமிழக அரசால் தொல்லியல் தளமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பண்டைய காலத்தில் பட்டினமருதூர் வெளிநாடுகளுடன் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததற்கான முக்கிய சான்றுகளாக கருதப்படுகின்றன.
சங்குகள் அறுக்கப்பட்டு ஆபரணங்கள் தயாரிக்கப்பட்ட தடயங்கள் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய சங்கு தொழிற்சாலை இயங்கி இருந்திருக்கலாம் என்ற வகையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வாரம் வரும் 25 ஆம்தேதி வரை கொண்டாடப்படும் நிலையில் இந்தத் தொல்லியல் தளத்தில்
இதுவரை நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சங்குகள், சங்கு வளையல்கள், சங்கு ஆபரணங்கள், பாசி மணிகள், கவுரி சிப்பிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள் உள்ளிட்ட ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பொருட்கள் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சீன நாணயங்கள், செலடான் வகை சீன மட்பாண்ட ஓடுகள், உறைக் கிணறுகள், கற்சுவர்கள் மற்றும் சுடுமண் வடிகால் குழாய்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதனையும் இந்த தொல்லியல் தளத்தையும் பள்ளி மாணவ மாணவியர்கள் பார்வையிட்டு பயனடைந்து வருகின்றனர்.
தொல்லியல் அலுவலர் ரா. அஜய் குமார் மற்றும் அலுவலர்கள் மாணவ மாணவியர்களுக்கு விளக்கம் அளித்தனர். நாளை வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.


