தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது .இதனால் சாலையில் முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கியபடி உள்ளது .இந்த நிலையில் அரசு மருத்துவமனை தாலுகா அலுவலகம் செல்லும் பிரதான சாலையில் திடீரென்று இரண்டு அடி ஆழமுள்ள பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மற்றும் பேரூராட்சி இடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளாததால் வேப்பிலையை பறித்து அதில் அபாயகர எச்சரிக்கை வைத்துள்ளனர். விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்..


