கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வினாடிக்கு 19,747 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் இன்றைய (24.11.2025) காலை 7 மணி நிலவரம் வருமாறு:
மருதூர் அணைக்கட்டு : நீர்மட்டம் – 11.4 அடி
வெளியேற்றம் (தாமிரபரணி ஆற்றின் வழியாக) – 22,543 கன அடி/விநாடி
ஸ்ரீவைகுண்டம் அணை : நீர்மட்டம் – 10.8 அடி
திறக்கப்பட்ட மதகுகள் எண்ணிக்கை – 14
வெளியேற்றம் – 19,747 கன அடி/விநாடி (தாமிரபரணி ஆற்றின் வழியாக )
கோரம்பள்ளம் ஏரி : நீர்மட்டம் – 1.9 மீட்டர்
திறக்கப்பட்ட மதகுகள் எண்ணிக்கை – 07
வெளியேற்றம் – சுமார் 6000 கன அடி/விநாடி (உப்பாது ஓடை வழியாக வெளியேற்றம்)
உப்பாத்து ஓடையில் தற்போது 8 மதகுகள் திறக்கப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.


