அக்டோபர் 10ஆம் தேதி மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு கனிமொழி எம்பி பணியைத் தொடங்கி வைத்தார். அப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி, கனிமொழி அவரின் தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் ஆச்சரியத்துடன் பார்த்த புகைப்படத்தை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பரிசாகக் கொடுத்தார். அதனைக் கனிமொழி எம்பி ஆச்சரியத்துடன் பார்த்து வாங்கிக்கொண்டார். அந்த தருணத்தைச் செய்தியாக விகடன் இதழில் கருவறை வாசனை என்ற தலைப்பில் வெளியானது.


