தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் இன்று தொடங்கியது.
தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் ஆணையர்(ம) தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் இன்று 24.7.23 பார்வையிட்டார். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன்,சார் ஆட்சியர் கௌரவ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


