தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, சம்பவ இடத்தில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் பாதிப்பு ஏற்படவில்லை..
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மருத்துவமனை வளாகத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. மருத்துவமனை நுழைவு வாயில் அருகே உள்ள மரம் முறிந்து விழுந்த போது, அப்பகுதியில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள நடைபாதை சேதம் அடைந்தது. மரம் முறிந்து விழுந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


