கழுகுமலையில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்,கழுகுமலை தியான் பவுண்டேஷன் சார்பில் தங்கம் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு அவசரகால முதலுதவி பற்றி செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை பற்றியும்.ஆம்புலன்ஸில் உள்ள அதிநவீன உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர் அந்தோணி ராஜ் தலைமை வகித்தார்.தியான் மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவக்குமார் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு முதலுதவி பயிற்சி அளித்தார்.இதில் தியான் மருத்துவமனை தலைமை நிர்வாகி கிருஷ்ண பிரியா உள்பட மருத்துவமனை செவிலியர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


