அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் தூத்துக்குடி (AIPRPA) கோட்ட சங்கத்தின் 2-வது மாநாடு தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருநெல்வேலி அஞ்சல் ஓய்வூதியர் சங்க செயலர் சண்முகசுந்தரராஜா, கோவில்பட்டி அஞ்சல் ஓய்வூதியர் சங்க செயலர் தவமணி, மாநில அமைப்பு செயலர் மனோகர் தேவராஜன், தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் மைக்கேல் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க செயலர் ஜெபக்குமார் – ஆகியோர் உரையாற்றினர். புதிய நிர்வாகிகளாக ஜெயராஜ் ஜெயகரன், ஜெபக்குமார் மற்றும் முத்துமாலா ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கர் நன்றி கூற மாநாடு சிறப்புடன் நிறைவுபெற்றது. கெரானா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பஞ்சப்படியினை மீண்டும் வழங்க வேண்டும், இரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு கட்டண சலுகை கெரானா காலத்தில் நிறுத்தப்பட்டது – அதனை திரும்பவும் வழங்க வேண்டும் போன்ற 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அஞ்சல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


