தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்வது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். திமுக மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பங்குத் தந்தை சேசுராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்சிலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


