நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் மே மாதம் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் பேரருட்திரு சகாயம் கொடியேற்ற திருப்பலியை நடத்தினார். திருவிழாவை முன்னிட்டு தினம் தோறும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. மணப்பாடு தூய ஆவி ஆலயம் பங்குத்தந்தை அண்டோ மனோஜ்குமார், சேசுராஜபுரம் கிறிஸ்து அரசர் ஆலய பங்கத்தந்தை அருட்திரு சந்தீஸ்டன், பாளை மறைமாவடடம் அருட்திரு தீப’ மைக்கேல் ராஜா, தூத்துக்குடி புனித தாமஸ் ஆங்கிலப்பள்ளி பங்குத்தந்தை ஜாக்சன் அருள், குரூஸ்புரம் துணை பங்குத்தந்தை பிளேவியன், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க காலனி ஆரோக்கிய அன்னை ஆலயம் பங்குத்தந்தை ஜெரேசின் கற்றார், ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் பங்குத்தந்தை கிஷோக் ஆகியோர் ஜெபமாலை ஆராதனை தினந்தோறும் நடத்தினர் இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பரபவனி நடந்தது. இதற்காக காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை சாத்தான்குளம் மறைமாவட்ட பேரருட்திரு ரவிபாலன் நடத்தினார். அதனை தொடர்ந்து சப்பர பவனி நடந்தது. இதில் மிக்கெல் சம்மன்ஸ், பரமோலாக மாதா, சூசையப்பர் என மூன்று சப்பரம் பவனி வந்தது. இந்த சப்பரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் பங்கு தந்தை அம்புரோஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.


