இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ஆம் நாள் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை அனுசரிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உலக காசநோய் தினம் (24.03.2022) தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு இணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர்.முருகவேல் அவர்கள் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.நெஞ்சக மருத்துவப்பிரிவு துறைத் தலைவர் சங்கமித்ரா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய்) சுந்தரலிங்கம் அவர்கள் திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.வல்லநாடு வட்டார காசநோயாளிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு நிதி உதவியுடன் கூடிய சத்துணவு, புத்தாடை மற்றும் காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சேவை புரிந்ததற்காக திருநெல்வேலி சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் / சாரா தக்கர் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கத்திற்க்குதூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.கேடயத்தை திருநெல்வேலி சாரா தக்கர் கல்லூரியின் கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜோன்ஸ், உயிரியல் துறை பேராசிரியர் ஜெபஆனந்தி ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பொற்செல்வன்,
கோவில்பட்டி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் போஸ்கோ ராஜா, துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (குடும்பநலம்) பொன் இசக்கி, துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) யமுனா, இந்திய மருத்துவக் கழக தூத்துக்குடி கிளை தலைவர் சந்திரசேகர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட காசநோய் நிலைய மருத்துவ அலுவலர் .ஆல்பர் சேக்ரட் செல்வின் அவர்கள் நன்றி கூறினார்.


