பன்னம்பாறையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் தூத்துக்குடி சவுத் பிரண்ட்ஸ் அணி முதல் பரிசை பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் ராகவா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி சவுத் பிரண்ட்ஸ் அணி ,சாத்தான்குளம் ஆங்கர் கிளப் அணி, என் முத்தையாபுரம் அணி, புது கிணறு ராகவா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, வடக்கு நல்லூர், கூட்டாம்புளி, பன்னம்பாறை ,நாலுமூலை கிணறு, அமிர்தவிளைநகர் ,திசையன்விளை, உடன்குடி, நாசரேத், மெய்ஞானபுரம் ,தட்டார்மடம், நாங்குநேரி உள்ளிட்ட 60 அணிகள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் போட்டிகளை சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இறுதிப்போட்டியில் சாத்தான்குளம் ஆங்கர் கிளப் அணியே எதிர்த்து தூத்துக்குடி சவுத் பிரண்ட்ஸ் அணி மோதியது .இதில் தூத்துக்குடி சவுத் பிரான்ஸ் அணி வெற்றி முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசு சாத்தான்குளம் ஆங்கர் அணிக்கும் கிடைத்தது .பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். முதலிடம் பெற்ற தூத்துக்குடி சவுத் பிரண்ட்ஸ் அணிக்கு ஊர்வசி எஸ் அமிர்தராஜ் எம்எல்ஏ சார்பில் 1 பரிசு ரூபாய் 15 ஆயிரம்மற்றும் சுழற்கோப்பை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் வழங்கினார். 2-வது பரிசு பெற்ற சாத்தான்குளம் ஆங்கர் அணிக்கு ரூபாய் 12 ஆயிரம் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. 3-வது பரிசு குறும்பூர் அணிக்கும்,4-வது பரிசு வடக்கு நல்லூர் அணிக்கும், 5-வது பரிசு புதுகிணறு அணிக்கும் ,6-வது பரிசு முத்தையாபுரம் அணிக்கும் ,7-வது பரிசு பன்னம்பாறை அணிக்கும், 8-வது பரிசு கூட்டாம்புளி அணிக்கும் ,9-வது பரிசு அமிர்த வேளைநகர் அணிக்கும், 10-வது பரிசு நாலுமூலைகிணறு அணிக்கும் கிடைத்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை பன்னம்பாறை ராகவா ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


