“பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும்” என்ற தலைப்பில் நான் எழுதிய நூல் வெளிவந்து விட்டது. நெல்லை புத்தக கண்காட்சியில் 119 காவ்யா ஸ்டாலில் கிடைக்கிறது. ஆதிச்சநல்லூர் கடந்த வந்த பாதை, உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் உருவான வரலாறு. நெல்லை பொருநை அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா, நெல்லை புத்தக கண்காட்சி (17.03.2022) துவக்க விழா, அருங்காட்சியகங்கள் பற்றிய கண்காட்சி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் உருவாக உழைத்த வரலாறு, நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட புத்தக கண்காட்சியில் உள்ள அருங்காட்சியகம் உள்பட 1902 ல் இருந்து இதுவரை வந்த ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பற்றி அறிக்கைகள்(ஆங்கிலம் மற்றும் தமிழ்) இந்த நூலில் க்.யூ.ஆர். கோடு மூலமாக பார்க்கும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் பிச்சுமணி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் டாக்டர் அருண்ராஜ், எழுத்தாளர் லேனா தமிழவாணன் அவர்களுடைய வாழ்த்துரையுடன் இந்த நூல் வெளிவந்துள்ளது.
நெல்லை புத்தகண்காட்சியில், புத்தக கண்காட்சி துவக்க விழா செய்தியுடன் பரபரப்பாக விற்பனையில் உள்ளது இந்த நூல். வாங்கி படியுங்கள் . ஆதரவு தாருங்கள். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


