மாநில இணை இயக்குனர் அவர்களின் ஆணைப்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அவர்களின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் வழிநடத்துதலின் பேரில் கருங்குளம் ஒன்றியத்தில் வட்டார அளவிலான இரண்டாம் அடுக்கு குழுக்கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் நடத்தப் பெற்றது. ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் பள்ளி அளவிலான குழு கூட்டமும், மூன்றாம் வாரம் வட்டார அளவிலான குழு கூட்டமும் , தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் நடத்தப் பெற்று பள்ளி செல்லா மாணவர்களின் எண்ணிக்கையை முழுமையாக குறைத்திட குழு கூட்டத்தில் தக்க ஆலோசனையினை ஒவ்வொரு பிற துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு மாணவர்களின் வீட்டுக்கே பள்ளியின் ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுநர்களும், இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்களும், ஒருங்கிணைப்பாளர்களும், மேற்பார்வையாளரும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுமாக இணைந்து சென்று மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் சேர்க்கை செய்யப்பட்டனர்.
இந்த மாதத்தில் எந்தெந்த மாணவர்கள் தொடர்ச்சியாக பள்ளி வரவில்லை? ஏன் வரவில்லை என்பது பற்றி பிரித்தறிந்து அவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, எந்தெந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை என மாணவர்கள் விபரம் தனியாக பிரித்து அவர்களை எவ்வாறு பள்ளியில் மீளவும் சேர்க்கை சேர்க்கலாம் ?என்பது பற்றியும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிற துறை அலுவலர்களிடமும் கேட்டறிந்து வருகின்ற வாரத்திற்குள் மாணவர்களின் வீட்டிற்க்கே சென்று அவர்களை சேர்க்கை செய்ய ஆலோசனை செய்யப்பட்டது. இன்று நடைபெற்ற இரண்டாம் அடுக்கு குழு கூட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் அவர்களும் அவர்களும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும், ஆசிரியர் பயிற்றுனர்களும், சிறப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


