தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினர் மாவட்ட கழக அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட ஜெ-யின் திருவுருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட கழக துணை செயலாளர் சந்தனம், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வழக்கறிஞர் வீரபாகு, மாவட்ட பிற அணி செயலாளர்கள் டேக் ராஜா, நடராஜன், பகுதி கழக செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன்ஆதித்தன், ஆண்ட்ரு மணி, கோமதி மணிகண்டன், பிள்ளை விநாயகம், வழக்கறிஞர் சரவண பெருமாள், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வக்கீல் ரவீந்திரன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


