தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று கால் நாட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற, சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா வருகிற மே 1ஆம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 10ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
இந்த நிலையில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை சிவன் கோவிலில் கால் நாட்டு விழா வெகு விமர்சியாக நடந்தது. காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கி கும்பாபிஷேகம் சுவாமிக்கு அலங்கார தீபாரனை நடந்தது. பின்னர் கோவில் வாசல் முன்பு கால் நாட்டு விழா சிறப்பு பூஜை, தீபாரணை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கோவில் இணை ஆணையர் அன்புமணி, சிவன் கோவில் வருவாய் அலுவலர் ருக்மணி, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் ஜெயலட்சுமி, பிஎஸ்கே ஆறுமுகம மாவிளக்கு கமிட்டி தலைவர் நெல்லையப்பன் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் மகாராஜன் மற்றும் நடராஜன், ஆனந்தராஜ், விநாயகம், சுப்பையா உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


