திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொருநை அருங்காட்சியகத்திற்கு 23.12.2025 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். திருநெல்வேலி மண்டலம் சார்பாக பொருநை அருங்காட்சியம் செல்வதற்கு திங்கள் முதல் சனி வரை தினசரி பொருநை அருங்காட்சியகம் செல்வதற்கு திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 11 நகரப் பேருந்துகளும், விடுமுறை நாட்களில் கூடுதலாக 7 நகரப் பேருந்துகளும், நெல்லை சந்திப்பிலிருந்து வண்ணார்பேட்டை, பாளை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாராள் தக்கர் கல்லூரி, ஜோஸ் பள்ளி விலக்கு வழியாக பொருநை அருங்காட்சியகத்திற்கு இயக்கப்படுகிறது.
அருங்காட்சியகத்திலிருந்து அதே வழியில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திற்கும் இயக்கப்படும். பொருநை அருங்காட்சியத்திற்கு செல்லும் பயணிகள் இப்பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
தி.லி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்து பொருநை அருங்காட்சியகம் (ரெட்டியார்பட்டி மலை )
செல்வதற்கு பேருந்து கால அட்டவணை
காலை 08.05 08.50 10.15 10.45 12.10 13.00 13.30 13.55 16.00 17.00
(தி.லி ஜங்ஷன் வண்ணார்பேட்டை பாளை பஸ்ஸ் டாண்ட் STC காலேஜ் ஜெபா கார்டன் )


