ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி இயக்கம், மாவட்ட மகளிர் திட்டம் இணைந்து நடத்திய இளைஞர் திறன் வளர்க்கும் திருவிழாவின் ஒரு பகுதியாக இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
முகாமில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வசந்தா முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், 130 பேர் இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி சான்றிதழ்களை வழங்கினார்.
மகளிர் திட்ட இணை இயக்குனர் வீரபத்ரன், உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், அண்ரோ உள்பட தனியார் நிறுவன பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


