புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரம் ஆர்சி தொடக்க பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா காெண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சூசை பாண்டியாபுரம் ஆர்சி தொடக்க பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மாநில தொழிலாளரணி மற்றும் தொழிற்சங்க பேரவை தலைவர் தாமரை வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் மாரிமுத்து, தெற்கு மாவட்ட தலைவர் குழந்தை பாண்டி, வடக்கு மாவட்ட துனை தலைவர் சீதாலெட்சுமி, மாநகர தலைவர் ராபர்ட், மாநகர துனை தலைவர் காளி, மற்றும் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


