மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணியில் 19.07.2024 முதல் நாள்தோறும் நற்செயல் என்ற தலைப்பில் தினம் ஒரு நற்செயல் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக (23.09.2025) 427-வது நாளை முன்னிட்டு தளவாய் திரு.D.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விதைப்பந்து தூவும் நிகழ்வில் வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சார்ந்த 10 பேராசிரியர்கள், 125 மாணவிகள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணியைச் சேர்ந்த 120-க்கும் மேற்ப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர், மேலும் இந்நிகழ்வில் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் ஹெலன் லாரன்ஸ், முதல்வர் சுஷ்மா ஜெனிபர், சமூக ஆர்வளர் பூ.திருமாறன், எழுத்தாளர் பா. ராஜநாராயணன் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணி துணைத்தளவாய் V.S.தீபா. உதவித்தளவாய் R.ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துகொண்டு மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு லட்சம் விதைப்பந்துகளைத் தூவினர். இதுவரையில் 10 லட்சம் விதைப்ந்துகள் பல்வேறு நிகழ்சிகள் மூலம் துவப்பட்டது. இந்நிகழ்சியில் மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக தளவாய் D. கார்திகேயன் சிறப்பரை நிகழ்த்தினார்கள். அப்பாது மாணவர்களில் முதலாவதாக தன்னுடைய லட்சியத்தை தெரிவித்த மாணவி அருனா, முத்து செல்வி மற்றும் சுவேதா ஆகியோர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



