கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை (வழி ரயில் நிலையம்) செல்ல கூடுதல் பேருந்து சேவையினை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள்,கோவில்பட்டி நகராட்சி தலைவர் திரு.கருணாநிதி அவர்கள்,கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


