திருச்செந்தூா் கோயில் பகுதியில் கடல் நீா் உள் வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் வழக்கமாக பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் பவுர்ணமி தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இரவில் கடற்கரையில் தங்கியிருந்து வழிபட்டனர். நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அங்கு ஏராளமான சிப்பிகள், நத்தைகளும் தென்பட்டன. எனினும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடினர். பின்னர் மாலையில் கடல் இயல்புநிலைக்கு திரும்பியது.


