தூத்துக்குடி சிவன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அன்னை பாகம்பிரியாளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள் மற்றும் மங்களப் பொருட்கள் படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


