கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டாரி மங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமான அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் ஆடிப் பூரத்தையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. மாலை 3 மணி முதல் ஹோமம், 4 மணிக்கு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
5 மணிக்கு அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு அம்பாள், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜ பிள்ளை தலைமையில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.


