சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி ஸ்ரீநாடாச்சி கன்னி கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு 207 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் சிறப்பு அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுற்று வட்டார பெண்கள் பங்கேற்ற 207 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. பூஜையை இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பெ. சக்திவேலன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பூஜையை காமராஜ் நகர் இந்து அன்னையர் முன்னணியர் பொறுப்பாளர் ராதா, மேலநடுவக்குறிச்சி இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ராதாசெல்வி ஆகியோர் வழிநடத்தினர். பூஜையில் பங்கேற்ற பெண்கள் விளக்கேற்றி பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிப்பட்டனர். தொடர்ந்து பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் தியாகராஜன், ஊர் பிரமுகர்கள் ராதாகிருஷ்ணன், கேந்தியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


