திருநெல்வேலி-திருச்செந்தூர் ரயில் பாதை நூற்றாண்டு விழா காண்பதை முன்னிட்டு நாச ரேத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி திருச்செந்தூர் இரயில்பாதை நாசரேத் வழியாகசெல்வதற்கு அரும் பாடுபட்டு முயற்சிசெய்தவர் நாசரேத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கனோன் ஆர்தர் மர்காஷியஸ் ஐயர். இந்த இரயில்பாதை நேற்று நூற்றாண்டு விழா கொண்டாடியதை முன்னிட்டு நாசரேத் இரயில் நிலையத்தில் நாசரேத் தூய யோவான் பேராலய திருச்சபை மக்கள் சார்பில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட திருச்செந்தூர் இரயிலுக்கு நாசரேத் ரயில் நிலையத்தில் வைத்து தலைமைப் பாதிரியார் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மூக்குப்பீறி சேகரகுரு டேனியல் ஞானப் பிரகாசம், சபை ஊழியர் எல்சின் தங்கத்துரை, வகுத்தா ன்குப்பம் சேகரகுரு செல்வ ராஜ், வாழையடி சேகர குரு ரூபன் மணிராஜ், பேராலய உதவிப் பாதிரியார் பொன் செல்வின் அசோக்குமார், சபைஊழியர்கள் ஜெபராஜ், ஜாண்சன்,ஸ்டேன்லி ஜாண் சன் துரை, வன மோகன் ராஜன்,திருமண்டல பெரு மன்ற உறுப்பினர்கள் செல் வின்,ஜெயபால், அண்ட்ரூ ரக்லண்டு, சி.எஸ்.ஐ. பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ், முன்னாள் சேகர பொருளாளர் மர்காஷி யஸ், முன்னாள் சேகர செய லாளர் ஆனந்தராஜ், எபனேசர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக இரயில் இன்ஜின் டிரைவர்களுக்கும், இரயில் கார்டுக்கும், ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் திருச்சபை மக்கள் சார்பில் நினைவுப் பரிசும் பொன்னாடையும் போர்த்தி கௌவரவப்படுத்தப்பட்டனர்.


